கோட்டாபய -மகிந்த இடையே வெடித்தது பனிப்போர் -புபுது ஜயகொட கண்டுபிடிப்பு

653shares

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

வர்த்தமானியில் வெளியாகிய 20 ஆவது திருத்தத்தை மீளாய்வு செய்ய பிரதமர் 9 பேர் அடங்கிய மீளாய்வு குழுவை நியமித்தார். 20 ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் காணப்படுகின்ற காரணத்தினால் தான் திருத்தம் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கை செலவுகள் நாளாந்தம் உயர்வடைந்த நிலையில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் 20 ஆவது திருத்தத்தினால் அரசாங்கம் முரண்பாட்டுடன் செயற்படும் போது அதன் விளைவையும் நாட்டு மக்கள் எதிர்கொள்ள நேரிடும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இரண்டு பிரதான தேசிய தேர்தல்களின் போது நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கினார்கள். ஆட்சியதிகாரத்துக்கு வந்த பின்னர் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் திசை திரும்பியுள்ளது.

மேல்மட்ட வர்க்கத்தினருக்கு சார்பாகவே அரசாங்கம் பல தீர்மானங்களை எடுத்துள்ளது. நடுத்தர மக்கள் நன்மை பெறும் திட்டங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. திட்டங்கள் பெயரளவில் மாத்திரமே செயற்படுத்தப்படுகிறது.

பொதுப்போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்தின் கொள்கை புதிதாக அறிமுகப்படுத்திய வீதி போக்குவரத்து ஒழுங்குமுறை ஊடாக அறிந்து கொள்ளலாம். இதிலும் நடுத்தர மக்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். அரசாங்கம் தவறான வழியில் செல்லும் போது தவறை சுட்டிக்காட்டும் உரிமை மக்களுக்கு உண்டு.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்கள் முதலில் தெளிவுபெற வேண்டும். பெரும்பான்மை பலத்தை பெற மக்கள் மத்தியில் முன்வைத்த விடயங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்தாமல் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகிறது என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்