புதிய அரசியலமைப்புத் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட முக்கிய கருத்து!

62shares

புதிய அரசியல் அமைப்பை உருவாக்க பொது மக்கள் கருத்து கணிப்பு நடத்துவது உசிதமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு சிறந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளளளார்.

ஜனநாயக தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

அரசியல்வாதிகளும் மனிதர்களே என்று நான் தெரிவித்துள்ளேன். வேறு எவரும் அவ்வாறு சொல்வதை நான் கேட்கவில்லை. பாலில் குளித்த அரசியல்வாதிகளைக் கண்டுபிடிக்க முடியாது. அரசியல் எமது சமூகத்தின் ஒரு பகுதி. ஜனநாயகத்தின் ஊடாக சகலதையும் செய்ய முடியும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் என்பது மற்றும் ஒருவரை கௌரவப்படுத்துவதும், அவரின் கருத்துக்களுக்கு இடமளிப்பதாகும். 78 ஆவது அரசியல் அமைப்புக்கு பொது மக்களின் கருத்துக்கள் பெறப்படவில்லை.

13 ஆவது அரசியலமைப்பு பெறுமதியனதும், முக்கியமானதாகும். 17 க்கும் மக்கள் கருத்து பெறப்படவில்லை. அதேபோல் 18 க்கும் 19 க்கும் மக்கள் விருப்பம் பெறப்படவில்லை.

நான் இன்னும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக செயற்படுவதால் 20 குறித்தும் 19 குறித்தும் பேச விரும்பவில்லை. மொத்தத்தில் புதிய அரசியலமைப்பு சிறந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கின்றேன்.

ஜனநாயகத்தை மையப்படுத்திய அரசியல் அமைப்பு ஒன்றே உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்