வவுனியாவில் போராட்டத்திற்கு தமிழ் முஸ்லிம் வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு! கடைகளைத் திறக்க வலியுறுத்தும் பொலிஸார்

248shares

வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறையை எதிர்த்து ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் , முஸ்லிம் வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் செயலாளரின் வர்த்தக நிலையம் உட்பட சில தமிழர்களின் கடைகள் திறக்கப்பட்டிருந்தது. இதேவேளை வவுனியா நகர்ப்பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார் வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றாக சென்று திறக்குமாறு தெரிவித்து வருகின்றனர் எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியா மொத்த மரக்கறி விற்பனை நிலையம் வழமைபோல் காலையில் செயற்பட்டதுடன் பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் தூர இட சேவைகளும் குறைந்த அளவில் இடம்பெற்றிருந்தது. இதேவேளை வவுனியாவில் சில முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டதுடன் பாடசாலைக்கும் குறைந்தளவான மாணவர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் அரச திணைக்களங்கள் உணவகங்கள் வழமைபோல் செயற்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
மேற்கு லண்டன் பகுதியில் கடை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் -இருவர் உயிரிழப்பு

மேற்கு லண்டன் பகுதியில் கடை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் -இருவர் உயிரிழப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது