இளம் குடும்பப் பெண்ணை கடத்திய நபர்கள் - ஆற்றுக்குள் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

162shares

காலி ஹெவ்லொக் வீதியில் இரண்டு பிள்ளைகளின் தாயான 23 வயதான பெண்ணை பலவந்தமாக முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லும் போது, அந்த முச்சக்கர வண்டியில் அருகில் உள்ள ஆற்றலில் கவிழ்ந்துள்ளது.

இதனையடுத்து முச்சக்கர வண்டியில் இருந்த பெண்ணை காப்பாற்றியதுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி போத்தல பிரதேசத்தை சேர்ந்த 26 மற்றும் 30 வயதான இரண்டு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.

குறித்த பெண்ணின் கணவன், ஹெவ்லொக் வீதியில் உள்ள குதிரை பந்தய நிலையம் ஒன்றுக் சென்றுள்ளதுடன் அவர் வரும் வரை இந்த பெண் அருகில் காத்திருந்துள்ளார்.

அப்போது இரவு 11 மணியளவில் சீன கொறடுவ பிரதேசத்தில் இருந்து வந்த முச்சக்கர வண்டி பெண்ணுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர் திடீரென பெண்ணின் கையை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டிக்குள் ஏற்றியுள்ளார்.

இதனையடுத்து முச்சக்கர வண்டியின் சாரதி அதனை வேகமாக செலுத்தியுள்ளதுடன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது, அது ஆற்றில் கவிழ்ந்து விழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
மேற்கு லண்டன் பகுதியில் கடை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் -இருவர் உயிரிழப்பு

மேற்கு லண்டன் பகுதியில் கடை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் -இருவர் உயிரிழப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது