மட்டக்களப்பிலும் பூரண ஹர்த்தால்: தமிழ் கட்சிகளின் போராட்டம் வெற்றி!

125shares

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் கட்சிகளின் அழைப்பை ஏற்று பொதுமக்கள் பூரண ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நீதிமன்றத்தின் ஊடாக தடை விதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு - கிழக்கு பகுதியில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பூரண ஆதரவை வழங்கி உள்ளனர்.

பொலிஸாரின் கெடுபிடி மத்தியில் வடகிழக்கு பகுதியில் வர்த்தக நிலையங்கள் உட்பட பாடசாலைகள், பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து என அனைத்தும் முடங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

அரச நிர்வாக கட்டமைப்புக்கள் இயங்கிய போதிலும் பொது மக்கள் வீதிகளுக்கு செல்லாது அனைத்து செயற்பாடுகளையும் முடக்கி ஹர்த்தாலை வெற்றி அடைய செய்துள்ளனர்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட்டது? தீர்ப்பு வெளியானது!

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட்டது? தீர்ப்பு வெளியானது!