20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனை; கோட்டா-மஹிந்த அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள முரண்பாடு? உண்மையை வெளிப்படுத்திய பிரமுகர்

64shares

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது நிச்சயம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்புத் திருத்த யோசனை குறித்து அரசாங்கத்திற்குள் இருக்கின்ற பங்காளிக் கட்சிகள் இடையே கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனை குறித்து கோட்டா-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கண்டியில் வைத்து நேற்றைய தினம் மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரான இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

20ஆவது திருத்த யோசனை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளுக்கு கொள்கை ரீதியான தீர்மானங்கள் இருக்கலாம். எனினும் இறுதியாக பார்க்கும் போது புதிய அரசியலமைப்புத் திருத்தம் என்பது பொதுஜன முன்னணிக்குள் போட்டியிட்டவர்களின் கொள்கை ரீதியிலான தீர்மானமாகும்.

காலத்திற்குத் தேவையானபடி திருத்தங்களை யாராகிலும் முன்வைக்க முடியும். எவ்வாறாயினும் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்த யோசனை குறித்து மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் குறித்து சந்தேகம் எதுவுமில்லை.

20ஆவது திருத்த யோசனை நிச்சயம் பெரும்பான்மையுடன் நிறைவேறும். அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் இருந்த போதே இலங்கை மத்திய வங்கியில் பாரிய மோசடி நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த 20ஆவது திருத்த யோசனையானது மக்கள் ஆணையைப் பெற்று செய்யப்படுகிற திருத்தமாகும்.

19ஆவது திருத்தமானது மக்கள் ஆணையின் ஊடாக செய்யப்படவில்லை. மக்கள் கருத்துக் கணிப்பிற்கு விடப்படும் அளவுக்கு திருத்தங்கள் ஏதும் இந்த 20ஆவது திருத்த யோசனையில் இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன் அதனைத் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்