கோட்டாபய - மஹிந்த அரசுக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் ஜனாதிபதி!

123shares

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தைத் தோற்கடிக்கத் தயாராகி வருவதாகவும் குறித்த திருத்தத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமரதுங்க விரைவில் மேடைக்கு வருவார் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு செயற்பட்டு வருகிறார்.

அவர் நட்பு அரசியல்வாதிகளிடம் தொலைபேசி அழைப்பு மூலமும் நேரடி சந்திப்பின் மூலமும் 20ஆவது திருத்தத் தின் பாதகமான நிலைமைகளைச் சுட்டிக்காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் திருத்தத்திற்கு எதிராக அவர் விரைவில் மேடைக்கு வருவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மிகவும் ஆபத்தானது என்றும் இது தொடர்பாக விரைவில் ஒரு நீண்ட அறிக்கை வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்