13 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ள விடயம்

129shares

இந்தியாவினால் அறிமுகம் செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கு ஒருபோதும் இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக தீர்மானிக்கவில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கை தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விவகாரத்தில் 13ஆவது திருத்தத்தின் அவசியத்தை இந்தியப் பிரதமர் நேற்றுமுன்தினம் நடந்த பேச்சில் எடுத்துக்கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை இராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி விரைவில் தீர்வுகாணவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொரோனா நெருக்கடி தீர்ந்த பின்னர் இந்தியா சென்று பேச்சு நடத்தவும் எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடனும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் இணையவழி பேச்சுவார்த்தையை நடத்தவும் உத்தேசித்திருப்பதாக அவர் கூறினார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோன்று இந்திய மீனவர்களுக்கும் பெரிய பாதிப்பு உண்டு. கூட்டு குழுவின் மூலம் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
மேற்கு லண்டன் பகுதியில் கடை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் -இருவர் உயிரிழப்பு

மேற்கு லண்டன் பகுதியில் கடை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் -இருவர் உயிரிழப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட்டது? தீர்ப்பு வெளியானது!

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட்டது? தீர்ப்பு வெளியானது!