ஸ்ரீலங்காவில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை: வெளிவந்த புதிய புள்ளிவிபரம்

220shares

கட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வலயத்திலுள்ள 15தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய, சுதந்திர வர்ததக வலயத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 268ஆக அதிகரித்துள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்ததக வலயத்தில், நேற்றைய தினமும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில்புரியும் அனைத்து ஊழியர்களும், தமது தொழிற்சாலை போக்குவரத்து சேவையின் ஊடாக மாத்திரம் தொழிற்சாலைக்கு வந்து செல்ல வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மினுவாங்கொட கொரோனா தொற்று உறுதியானோருடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதன்படி, மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2, 222 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!