சீனா கூறுவது உண்மையென எப்படி தெரியும் -மீளவும் சீண்டிய ட்ரம்ப்

551shares

கொரோனாவால் தமது நாட்டில் உயிரிழந்தோர் தொடர்பில் சீனா கூறுவது உண்மைதான் என்பது தமக்கு எப்படி தெரியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,15,003 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் பலியானோரின் எண்ணிக்கை 5,102 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,049 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து டொனால்ட் டிரம்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பிய செய்தியாளர், சீனாவை விட அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதே என கேட்டார்

இதற்கு டிரம்ப் பதிலளிக்கையில், பலி எண்ணிக்கையை சீனா சரியாகத்தான் சொல்கிறது என்பது எப்படி எமக்கு தெரியும்? அவர்களுடைய புள்ளி விவரங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கலாம் என தெரிவித்ததுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் நல்லுறவே நீடிக்கிறது என தெரிவித்தார்.

இதேவேளை அமெரிக்க உளவுத் துறையும் சீனாவில் ஏற்பட்ட நோய் தொற்றுகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறித்து அந்நாடு சர்வதேச நாடுகளுக்கு தவறான தகவலை அளித்திருக்கலாம் என கூறியுள்ளது.

சீனாவை விடவும் அமெரிக்காவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது தவறான செய்தியாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை

கோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடித்தழிப்பு- மக்கள் அனைவருக்கும் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடித்தழிப்பு- மக்கள் அனைவருக்கும் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

ஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்!