களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

1660shares

சீன நிறுவனங்களிடம் பங்கு முதலீட்டாளர்கள், ஏமாறுவதை தடுக்க களத்தில் இறங்கிய ட்ரம்ப் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், மைக் போம்பியோவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

“சீனா, முதலீட்டாளர்களை பாதுகாக்கும் நெறிமுறைகளை பின்பற்றாமல், அமெரிக்க பங்குச் சந்தைகள் மூலம் ஆதாயம் அடைகிறது. இது மிகத் தவறு.

சீன நிறுவனங்கள், அமெரிக்க பங்குச் சந்தைகளில் மூலதனத்தை திரட்டுகின்றன. இது, சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.

அதேசமயம், அமெரிக்க பங்குச் சந்தைகள் பின்பற்றும் முதலீட்டாளர் நலன் சார்ந்த நெறிமுறைகளை, சீன நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை.

அதற்கு காரணம், சீன அரசு, இயற்றியுள்ள சட்டங்கள் தான்.உதாரணமாக, சமீபத்தில், சீன அரசு ஒரு சட்டம் இயற்றியுள்ளது.

அதில், கணக்கு தணிக்கையாளர்கள், நிறுவனங்களின் ஆண்டு நிதி நிலை அறிக்கையை, பொது நிறுவன கணக்கு கண்காணிப்பு வாரியத்திடம் நேரடியாக வழங்க முடியாது. நிதி ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு அனுமதி அளித்தால் மட்டுமே, வழங்க முடியும்.

இதனால், நிறுவனங்கள் வெளியிடும் நிதி அறிக்கைகள் மீது, முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை போய்விடும்.

அத்தகைய நிறுவனங்களால், முதலீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை ஏற்படும். இது, சில்லரை முதலீட்டாளர்கள் முதல், ஓய்வூதிய நிதியம் வரை, அமெரிக்க பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வோர் அனைவரையும் பாதிக்கும்.

எனவே, அமெரிக்கா பின்பற்றும் விதிமுறைகளை, பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள சீன நிறுவனங்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

அதற்குரியநடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்”இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்