நாளை பதவியேற்பு! பைடனின் அதிரடி அறிவிப்பு

626shares

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதும் டொனால்ட் ட்ரம்பின் முதல் 10 நாள் திட்டத்தை தலைகீழாக மாற்றவுள்ளதாக, ஜோ பைடனின் உள்வரும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரான் க்ளெய்ன் தெரிவித்துள்ளார்.

பதவியேற்கும் முதல் நாளிலேயே ஜோ பைடன் பல நிறைவேற்று உத்தரவுகளை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி - டெனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பல முஸ்லிம் நாடுகளின் சர்ச்சைக்குரிய பயணத் தடையை இரத்து செய்வது என்பது பிரதான விடயமாகும்.

இதனுடன், புதிய கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகள், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்கு குடியுரிமை பெற அனுமதிக்கும் குடியேற்றச் சட்டம் ஆகியவை அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள ‘தமிழ்பெண்’ - உலகத் தமிழர்களிடம் உருக்கமான வேண்டுகோள்

பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள ‘தமிழ்பெண்’ - உலகத் தமிழர்களிடம் உருக்கமான வேண்டுகோள்

தாமரை மலரில் புதிய கூட்டணி! தலைவராக விக்னேஸ்வரன்?

தாமரை மலரில் புதிய கூட்டணி! தலைவராக விக்னேஸ்வரன்?

காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு விரைவில் தீர்வு! உறுதிபூண்டார் ஜனாதிபதி கோட்டாபய

காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு விரைவில் தீர்வு! உறுதிபூண்டார் ஜனாதிபதி கோட்டாபய