திருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்!

584shares

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 63 பேர் கொல்லப்பட்டதுடன் 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடைபெற்ற பின்னர் திருமண அரங்கம் முழுவதும் சிதறிய உடல்கள் கிடக்கின்றன.

திருமண நிகழ்வின்போது தற்கொலை குண்டுதாரி குண்டுகளை வெடிக்கச் செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10:40 மணிக்கு இந்தசம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்துக்குத் தாங்கள் காரணமல்ல என் தலிபான் அமைப்பு கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஷியா பிரிவைச் சேர்ந்த ஹசாரா சிறுபான்மை இன மக்களை தலிபான் மற்றும் இஸ்லாமிய அரசு அமைப்பின் தீவிரவாதிகள் தொடர்ந்து இலக்கு வைத்துத் தாக்கி வருகின்றனர்.

10 நாட்களுக்கு முன் காபூலில் பொலிஸ் நிலையம் ஒன்றின் முன்பு நடந்த குண்டுவெடிப்புக்கு தலிபான் பொறுப்பேற்றது. அதில் 14 பேர் இறந்தனர்; 150 பேர் காயமடைந்தனர்.

.