ஆஸ்திரேலியா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு: தமிழுக்கு கிடைத்துள்ள பெருமை; மகிழ்ச்சியில் உலகத்தமிழர்கள்!

1345shares

ஆஸ்திரேலியா அரசு தமிழ் மொழியை உள்ளடக்கிய புதிய பாடத்திட்டத்தை வெளியிடவுள்ளமை உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றது.

இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் வசிப்பவர்களில் 39 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளில், பிறந்தவர்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய கலாச்சாரம் பல மொழிகளைக் கொண்டதாக அமைய வேண்டும் என்ற நோக்குடன், ஆஸ்திரேலிய பள்ளி பாடத் திட்டத்தில் உலகில் அதிகம் பேர் பேசக்கூடிய மொழிகளை சேர்க்க முடிவெடுக்கப்படுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு பள்ளிப் பாடத் திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் தமிழ், இந்தி, பஞ்சாபி, பெர்சியன், மெக்டோனியன் ஆகிய 5 மொழிப்பாடங்களை சேர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை, இரண்டாவது மொழியாக தமிழ் பயிற்றுவிக்கப்பட உள்ளது. அதற்கான பாடத்திட்டத்தை நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழிகளுக்கு அடுத்தபடியாக தமிழ் ஆஸ்திரேலியாவில் விருப்பப்பாடமாக அமல்படுத்தப்படவுள்ளது.

இந்த அறிவிப்பு தமிழர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை

கோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை

ஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

விடுதலைப்புலிகள் தலைவர் தொடர்பான கருத்து -கோட்டாபய மீது போர்க்குற்றவிசாரணை

விடுதலைப்புலிகள் தலைவர் தொடர்பான கருத்து -கோட்டாபய மீது போர்க்குற்றவிசாரணை