சீனாவுக்கு வெளியே 30 நாடுகளை குறி வைத்தது கொரோனா! எச்சரிக்கை மணி அடித்தது உலக சுகாதார அமைப்பு

211shares

சீனாவின் வுகான் நகரில் உருப்பெற்ற கொரோனா வைரஸ் தற்போது 30 இற்கும் அதிகமான நாடுகளில் பரவி உயிர்களை காவு கொண்டுள்ளது. இந்நிலையில் உலக நாடுகளை எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் இனம் தெரியாத வைரஸ் தாக்கத்தினால் பொது மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். எனினும், அது சாதாரண வைரஸ் என்று அசட்டையாக இருந்துவிட்டது சீனா. ஆனாலும் மருத்துவர்கள் எச்சரித்த போதும் அதனை சீனா கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையில் நான்கு முறை இந்த வைரஸ் பெரும் பூதாகரமாக மாறும் என்றும், இதனால் பெரும் இழப்பினை சந்திக்க வேண்டிவரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதும் கூட சீன அரசாங்கம் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த ஆண்டின் இரண்டாம் வாரப்பகுதியில் தான் சீனா இது தொடர்பில் அக்கறை செலுத்தத் தொடங்கியது.

கொரோனாவினால் சீனா நிலை குலைந்தது என்பதையும், அனைத்தும் எல்லை மீறிச் சென்று விட்டதையும், இது சாத்தானின் தாக்கம் என்றும் சீன ஜனாதிபதியே ஒத்துக் கொண்டுள்ளதுடன், நிலமையை சீர் செய்வதற்கு அனைத்து தரப்பினரையும் களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் சீன ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தாக்கத்திற்கு இலக்காகி 3000 இற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளார்கள். சீனாவிற்கு வெளியிலும் பலரை காவு கொண்டுவிட்டது. இலங்கையிலும், இந்தியாவிலும் கண்டறியப்பட்டவர்கள் முழுமையாக குணமாக்கப்பட்டு விட்டாலும், கொரோனா தாக்கம் குறையவில்லை என்றும், விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தியிருக்கிறது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போதைய சூழலில் இது உலகம் முழுதும் பரவும் நிலை இல்லை என்றாலும், உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதால் அந்நாட்டு மக்களிடையே பீதி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சீனாவில் இதுவரை 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இதுவொருபுறமிருக்க, சீனாவுக்கு வெளியே சுமார் 30 நாடுகளில் 1200 பேருக்கு கொரானா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20 பேர் அதற்கு பலியாகியுள்ளனர். இத்தாலியில் நேற்று மட்டும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

மறுபுறத்தில், கொரோனா தொற்று பாதிப்பால் உலக பங்குத் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பவர்களின் விகிதம் ஒன்றிலிருந்து இரண்டு சதவீதம் வரை இருக்கலாம் என கூறப்பட்டாலும், சரியான தகவல்கள் இன்னும் தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், உலக மருத்துவர்கள் கொரோனாவிற்கு எதிரான மருந்துவகைகளை கண்டறிவதில் ஈடுபட்டுக் கொண்டிருகிறார்கள். ஆனாலும் தற்போது வரை எந்தவிதமான மருந்துகளையும் கண்டறிய முடியாமல் அவர்கள் திணறிக் கொண்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


you may like this

Tags : #Covid-19 # #China
இதையும் தவறாமல் படிங்க
மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி தமிழில் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

அமெரிக்கர்கள் எப்போதுமே இப்படித்தான்! பதிலடி கொடுத்தது சீனா

அமெரிக்கர்கள் எப்போதுமே இப்படித்தான்! பதிலடி கொடுத்தது சீனா