இந்தியாவின் சூழ்ச்சியால் உருக்குலையும் சீனா! பகிரங்கமாக வெளியிட்டுள்ள அறிக்கை

1283shares

இந்திய - சீன நாடுகளுக்கு இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் இனி இந்த பிரச்சினையை தீர்க்க வாய்ப்பு இல்லையென ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மோதலை தொடர்ந்து எல்லையில் 22 முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் இன்று அதிரடி திருப்பமாக இந்திய பிரதமர் மோடி லடாக் சென்றார்.

லடாக்கில் இருக்கும் நிம்மு இராணுவ முகாமிற்கு சென்று வீரர்களை சந்தித்து பிரதமர் மோடி அவர்களிடம் உரையாற்றினார். எல்லையில் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதையும் கண்டறிந்தார்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்தது. சீனாவிற்கு இந்தியா இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த நிலையில் சீனாவின் செயலிகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட தடைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியா - சீனாவின் உறவு மோசமாக பாதிக்கும் என்று சீனாவின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளியுறவுத்துறை இது தொடர்பாக அறிக்கை வெளியிடுகையில்,

சீனாவின் சேவைகளுக்கு இந்தியா செயற்கையான தடைகளை விதித்து வருகிறது. இது இரண்டு நாட்டு உறவை பாதிக்கும்.

இரண்டு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். எல்லையில் நடக்கும் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.

சீனாவில் மீண்டும் எங்கள் செயலிகள் செயல்பட பேசி வருகிறோம். இந்தியா இது தொடர்பாக கொடுத்துள்ள விளக்கத்தை ஏற்க முடியாது. இந்தியாவில் சீனாவின் வியாபாரம் மற்றும் வணிகங்களை தொடர சீனா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். இந்தியாவில் எங்கள் வியாபாரத்தை செய்யும் உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் சீனா கூறியுள்ளது.

You May Like this Video

இதையும் தவறாமல் படிங்க
எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்