சீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவுள்ள உலக சுகாதார நிறுவனம்!

545shares

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில் இதன் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர்குழு அடுத்த வாரம் சீனாவுக்கு பயணமாக இருக்கிறது.

சீனாவின் மத்திய நகரமான வுஹானில் உள்ள இறைச்சி சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

அதைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டு விட்டாலும் வுஹானில் கொரோனா வைரஸ் தோன்றியதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை.

இவ்வாறான கருத்துக்களுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் வுஹானில் உள்ள வைராலஜி நிறுவனத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டு, அங்கிருந்து கசிந்து விட்டதாக அமெரிக்க டி.வி. பரபரப்பு செய்தி வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் கூறி வந்தனர்.

இந்நிலையில் வைரசின் தோற்றம் பற்றிய விசாரணையை நடத்த உலக சுகாதார நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்தக் குழு கொரோனா வைரஸ் எவ்வாறு மனிதர்களிடம் முதன் முதலில் பரவியது, விலங்குகள் மூலமாக மனிதர்களிடம் தொற்று வந்ததா? அல்லது வௌவால்களிடம் இருந்து மனிதர்களிடம் பரவியதா? என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Like This vIdeo

இதையும் தவறாமல் படிங்க
எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்